SKMP பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மிக நவீன இயந்திரங்களைக் கொண்டுள்ளது. இந்த இயந்திரங்கள் கட்டுமானத்திற்கான ஒரு ஹெக்டேர் பரப்பளவோடு 6.2 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. ஸ்ரீ காளீஸ்வரியில் நிர்மானிக்கப்பட்டுள்ள மொத்த கொள்திறன்:
- காற்றினால் நுண்ணியமாக்கப்பட்ட அலுமினிய தூள் - ஆண்டிற்கு 1800 டன்
- வாணவெடிக்கான அலுமினியம் தூள் – ஆண்டிற்கு 900 டன்
நிறுவனத்திடம் சிறப்பான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உயர்தரமான தூளைத் தயாரிப்பதற்காக உள்ளன. தேவையான ஆய்வுக்கூடம் உயர்தரமான உபகரணங்களுடன் அலுமினிய தூள்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொழில்நுட்பாளர்களுக்கு துல்லியமாக உற்பத்திப்பொருட்களை தரப்படுத்தவும் உதவவும் உள்ளது.